ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ராக்கெட் மற்றும் ராக்கெட் கருவிகள் மூன்று நாள் கண்காட்சி
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ராக்கெட் மற்றும் ராக்கெட் கருவிகள், எரிபொருள் குறித்தும், மூன்று நாள் கண்காட்சி - மாணவ, மாணவிகள் ராக்கெட் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டதாக பெருமிதம் .
மதுரை மாவட்டம் திருமங்கலம் பி. கே. என் .கலை கல்லூரி வளாகத்தில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ சார்பில் ராக்கெட் மற்றும் அதனுடைய உபகரணங்கள் எரிபொருள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருவிகளை வைத்து மூன்று நாள் கண்காட்சி நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்து எட்டாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை உள்ள மாணவ, மாணவிகள் ஏராளமானோர், இக் கண்காட்சியில் பங்கு பெற்று பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டதுடன், ராக்கெட் எவ்வாறு இருக்கிறது எனவும், அதன் உதிரி பாகங்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றை அறிந்து கொண்டு , பூமியிலிருந்து ராக்கெட் விண்வெளியில் எவ்வாறு பறக்கின்றது ?அதனுடைய பலன்கள் என்ன ?மேலும் ராக்கெட் வகைகள் குறித்தும் அறிந்து கொண்டதை பெருமிதம் தெரிவித்தனர். இக் கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை