திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நாளை கார்த்திகை மகா தீபம்
திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.. இதை ஒட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சந்தனம், பால், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுவாமி கோயில் ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளுவார்.அங்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சுப்பிரமணியசாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை காலை 11 மணி அளவில் சிறிய வைர தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை