• சற்று முன்

    எடப்பாடி பழனிச்சாமிக்கு 99 சதவிகித அதிமுக தொண்டர்கள் ஆதரவாக உள்ளனர்... சாத்தூரில், முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேட்டி

    சாத்தூர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள் தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தலைமையில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு, மாபா பாண்டியராஜன் மற்றும் அதிமுக கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்கள் பேட்டியின் போது, ஜி.20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது என்பது நமக்கெல்லாம் பெருமை. அந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது அதிமுகவிற்கு கிடைத்த அரசு அங்கீகாரம். ஜி 20 மாநாட்டை தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அதிமுக கட்சியால் தான் முடியும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு நினைத்ததால் தான், எடப்பாடி பழனிச்சாமியை அழைத்துள்ளனர். 

    தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்  குறித்த கேள்விக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது யாராவது இப்படி கூறி விட்டு கட்சியில் இருக்க முடியுமா என்று பாண்டியராஜன் கேள்வி எழுப்பினார். பாஜகவிற்கு அடிபணிந்து அங்கீகாரம் கேட்பது ஓ.பன்னீர்செல்வம் அணி. ஆனால் ஆளுமை மிக்க எடப்பாடி பழனிச்சாமியைத் தான், பாரதிய ஜனதா கட்சி அங்கீகரித்து டெல்லிக்கு அழைக்கின்றது. இதனைத் தான் அதிமுக தொண்டர்களும் விரும்புகின்றனர். அதிமுக கட்சியின் 99 சதவிகித தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் கூட்டணி உருவாக்கப்படும் என்று கூறினார்.செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad