திருமங்கலத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபர் கைது - மேலும் ஒருவர் தலைமறைவு .
திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமத்தைச் சார்ந்த சுந்தரபாண்டி (30), கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போன்று குற்றத்தில் ஈடுபட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் மதுரையைச் சேர்ந்த மலைராஜ் (26) மற்றும் கீழ உரப்பினர் கிராமத்தைச் சார்ந்த பிரதீப் (23) ஆகிய இருவரிடம் நட்பு ஏற்பட்டு, அவர்கள் மூலம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கிடைக்கும் இடத்தை அறிந்து ,விற்பனைக்காக திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது , சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்ற சுந்தரபாண்டி - யை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 2000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவருடன் இருந்த மதுரையைச் சேர்ந்த குலுமாயி (24) என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை