Header Ads

  • சற்று முன்

    திண்டுக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்!

    திண்டுக்கல் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பாக திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் பி.பி.நடராஜன், கே.ராஜகுரு அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதோடு அதையொட்டி பல முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அதில், ஜனவரி 10-ல் பசுபதி பாண்டியன் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த 100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது எனவும்,  தேவேந்திரகுல வேளாளர்களை  பட்டியல் பிரிவிலிருந்து எடுத்து மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிடவும், பசுபதி பாண்டியன் நினைவு நாளில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நந்தவனப்பட்டி பசுபதி பாண்டியன் இல்லம் வரை அமைதிப் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்கிடவும், நீண்டநாட்களாக சிறையில் இருக்கும் ஆயுள்தன்டனை கைதிகளை கருனை அடிப்படையில் விடுதலை செய்யவும், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஜி.ரமேஷ் குமார் மீது முன் பகை காரணமாக வடமதுரை சார்பு ஆய்வாளர் பிரபாகரன் பொய் வழக்கு போட்டதை திரும்பப் பெறக் கோரியும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. மேலும், பலர் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் இணைந்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜி.ரமேஷ் குமார், மாவட்ட செயலாளர் சி.கே.கார்த்திக், தென் மண்டல துணை தலைவர் பூமிநாதன், இளைஞர் அணி சங்கிலி கருப்பு, மேற்கு மாவட்ட தலைவர் செல்லமுத்து மற்றும் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் பலர் வெகுதிரளாக கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad