மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஹார்விப்பட்டியில் 7 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஹரர்விப்பட்டி பகுதியில் மலை பாம்பு ஒன்று இருப்பதாக வன துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது 'இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் ரேஞ்சர் மணிகண்டன் மற்றும் பாம்பு பிடி வீரர் சினேக் சகா குழுவினருடன் தேடிப் பார்த்ததில் 7அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து மலைப்பாம்பை பிடிக்கும் பணியில் சகா மற்றும் குழுவினர் ஈடுபட்டனர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் மலைப்பாம்பு பிடிபட்டது -அதனை தொடர்ந்து அந்த மலைப்பாம்பு நாகமலைபுதுக்கோட்டை வனப்பகுதியில் விடுவிக்கபட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை