Header Ads

 • சற்று முன்

  கட்டுமான தொழிலாளர் வீடு கட்டும் திட்டத்தில் சில தனிநபர்கள் ஊழல் புரிய அனுமதிக்க கூடாது. ஏ ஐ டி யூ சி கட்டிட தொழிலாளர் சங்கத்தில் தீர்மானம்.

  கோவை : தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட தலைவர் எஸ்.பி. தியாகராஜன் தலைமையில் பாப்பநாயக்கன்பாளையம் சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. துணைத் தலைவர்கள்  ஆர். பாலகிருஷ்ணன், சி. நந்தினி, ஜெ. கலா, துணைப் பொதுச் செயலாளர் கோட்டை ஆர். நாராயணன், செயலாளர்கள் மேட்டுப்பாளையம் எல். செல்வம், வால்பாறை ஏ.டி.கே. தனபாண்டியன், பணப்பட்டி மருதாசலம், பொருளாளர் என். சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் என்.செல்வராஜ் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் என். சோமசுந்தரம் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்.

  மேட்டுப்பாளையம். ராமதாஸ், காரமடை கிழக்கு தேவ. செந்தில்குமார், காரமடை மேற்கு சரவணன், பெரியநாயக்கன்பாளையம்  ஜெகநாதன், கோவை வடக்குப் பகுதி ராமசுலோசனா, சதாசிவம்., மேற்கு முரளி, கிழக்கு பகுதி நேருநகர் நடரா‌ஜ், காளப்பட்டி முருகேசன், கார்பெண்டர் மணி, தெற்கு மோசையா,  அன்னூர் பொன்னுசாமி, சுல்தான்பேட்டை மணிகண்டன், சூலூர் பொன்னுசாமி, மணோன்மணி, நெகமம் ஜெயக்குமார், கிணத்துக்கடவு  தங்கவேல்,  ஆனைமலை ராமதாஸ், கட்டுமான பெண் தொழிவாளர் சத்யா  உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுனர்.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு.

  1. வீடுகட்டும் தொழிலாளிகளின் வீடு இல்லாதவர்களுக்கு நலவாரியம் வீடு கட்டித் தரவேண்டும் என்று ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் நீண்ட காலமாக கேட்டு வந்தது. புதிதாக  பொறுப்பேற்ற  மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசு ஒரு ஆண்டில் இக்கோரிக்கையை ஏற்று வீடுகட்டிக்கொள்ள நான்கு லட்சம் ரூபாய் உதவி வழங்க அரசாணை வெளியிட்டு திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதை ஏஐடியுசி சங்கம் இதய பூர்வமாக வரவேற்கிறது.. தமிழ்நாடு அரசை பாராட்டுகிறது.

  2. பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கேட்டு விண்ணப்பம் செய்வதற்காக சில தனிநபர்கள் தொழிற்சங்கம் என்கிற பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கட்டணம் கட்ட வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக தெரிய வருகிறது. அரசு திட்டத்தை சிலர் கொள்ளையடிக்க பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது அத்தகைய நபர்கள் குறித்து தொழிலாளர் கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொள்கிறது. 

  3. இத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தை பதிவு மூப்பு அடிப்படையில் பரிசீலனைசெய்து நிதி வழங்க வேண்டும் என்றும் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பட்டா இருந்தாலும். அங்கீகரிக்கப்படாத வரைபடத்தை ஏற்றுக்கொண்டும் விண்ணப்பத்தை ஏற்க வேண்டும் என்றும் விவசாய நிலமாகவோ. வேறுவகை நிலமாகவோ இருப்பின் மூன்று சென்ட் நிலத்தை நத்தம் நிலமாக மாற்றித் தர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு,  இத்திட்டத்தின் படி வீடு இல்லாத கட்டடத்தொழிலாளி வீடு கட்டிக்கொள்ள உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

  4.  தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்று 60 வயது நிறைவடைந்த கட்டுமானத் தொழிலாளிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கட்டுவருகிறது. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் ஓய்வுதியம் பெற்று வருகிறார்கள். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் தானா என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு நடத்தி வருகிறார்கள். இவ்வாறு ஆய்வு நடத்துவது என்று மாநில முத்தரப்பு நல வாரியக்கூட்டத்திலோ. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் உள்ள முத்தரப்பு கண்காணிப்புக்குழுக் கூட்டத்திலோ முடிவு ஏதும் செய்யப்படாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவது கண்டனத்திற்குரியது  ஆகும். 

  அவ்வாறு ஆய்வுக்குப்போகும் அதிகாரிகள் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலாளர்களா? என்பதை விசாரிப்பதோடு  எவ்வளவு கேஷ் சிலிண்டர் இருக்கிறது.வாடகை வீடா சொந்த வீடாக.  என்ன வாகனம் வைத்திருக்கிறீர்கள். குடும்பத்தில் எத்தனை பேர் என்ன வேலை செய்கிறீர்கள் எவ்வளவு வருமானம் வருகிறது என்று அவசியமற்ற கேள்விகளைக் கேட்டு ஓய்வூதியர்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். எனவே. அதிகாரிகளின் தன்னிச்சையான இந்த ஆய்வு நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். 

  நல வாரியக்கூட்டத்தில் ஆய்வு தேவையா? 

  என்ன நோக்கத்திற்காக ஆய்வு என்பதை முத்தரப்புவாரிய உறுப்பினர்களாக உள்ள தொழிற்சங்க நிரவாகிகளை கலந்தாலோசனை செய்து வாரியத்தில் முடிவு செய்து இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கோவை மாவட்ட நிருபர் : அக்கினி புத்திரன் 

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad