விடுதலை சிறுத்தைகள் அமைப்பை தடை கோரி இந்து அமைப்பினர் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு
தேசவிரோத ,இந்துவிரோத பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பிற்க்கு ஆதரவு கட்சியான விடுதலை சிறுத்தை கட்சியை தடை செய்யக் கோரியும்,திருமாவளவனை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் 12-12-2022 இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் தமிழக. அர்ஜுன் சம்பத் ஆணைக்கிணங்க இந்துமக்கள்கட்சி மாநிலச்செயலாளர் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் தலைமையில் மதுரையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் மதுரை மாநகர காவல்துறை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் T.அன்பழகன், தென் மாநில துணைச்செயலாளர் G.மணிகண்டன், மாவட்ட செயலாளர் அழகர்சாமி, ஆன்மீக அணி மாநில செயலாளர் P.குணா, ஆன்மீக அணி மேற்கு மாவட்ட தலைவர் S.விக்னேஷ் ,வடக்கு மாவட்ட தலைவர் கார்த்திக்ராஜா, தெற்கு மாவட்ட தலைவர் Mu.கணேசன் மற்றும் பல முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை