சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய மெகா கருத்தரங்கு கோவில்பட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூரில் அமைந்துள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சிவகாசி கிளைகளின் இந்திய பட்டய கணக்காளர்களின் சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய மெகா கருத்தரங்கு நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில நடைபெற்றது.
இக் கருத்தரங்கத்தினை தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
இக்கருத்தரங்கத்தின் சிறப்பு விருந்தினர்களாக நேஷனல் பொறியியல் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சில் உறுப்பினர் கணக்காளர் எஸ்.ராஜேஷ், கணக்காளர் ரேகா உமாஷிவ் மற்றும் கணக்காளர் எ.வி.அருண் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.









கருத்துகள் இல்லை