குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருப்பரங்குன்றம் அருகே... நான்கு வழிச்சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து... 15 பேர் படுகாயம்!

கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகள் வாகனம் சென்றுகொண்டிருந்த போது மதுரை திருமங்கலத்தை அடுத்த நான்கு வழிச் சாலையில் உள்ள கீழக்குயில்குடி மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்ற போது, வாகனத்தை கட்டுப்படுத்திய போது  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 15 பேரில் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மீதமிருந்த 13 பேர் லேசான காயத்துடன் 108 அவசர ஊர்தி மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர்  இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

கருத்துரையிடுக

புதியது பழையவை