Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. திமுக இளைஞரணி சார்பில் நடத்த மினி மராத்தான் போட்டியை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைத்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மினி மராத்தான் போட்டியை கொடியாசித்து தொடங்கி வைத்தார். 

    இப்போட்டியில்ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மராத்தான் போட்டி விளாத்திகுளம்-கோவில்பட்டி சாலையில் வைத்து ஆண்களுக்கு 16 கிமீ பெண்களுக்கு 10 கிமீ என இரண்டு பிரிவாக நடைபெற்றது. பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசு ரூபாய் 16 ஆயிரத்தை விளாத்திகுளம் அரசும் மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகாவும், இரண்டாம் பரிசு ரூபாய் 14 ஆயிரத்தை புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலாவும்,மூன்றாம் பரிசு ரூபாய் 12 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவி கனகலட்சுமியும் பெற்றனர்.

    ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூபாய் 16 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் மனோஜ் குமார் இரண்டாம் பரிசு ரூபாய் 14 ஆயிரத்தை அதே பள்ளியைச் சேர்ந்தவா் முகேஷ்,மூன்றாம் பரிசு ரூபாய் 12 ஆயிரத்தை ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் பெற்றனர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad