காமன்வெல்த் - யூத் செஸ் போட்டியில் மதுரை மாணவி தங்கப்பதக்கம்: குவியும் பாராட்டுக்கள்
காமன்வெல்த் யூத் செஸ் போட்டிகள் சமீபத்தில் இலங்கையில் நடந்தது. இதில் உலகில் உள்ள 17 நாடுகளில் இருந்து ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், 16 வயதுக்குட்பட்டவர் களுக்கான பெண்கள் பிரிவில் நடைபெற்ற செஸ் போட்டியில் மதுரை சொக்கலிங்கம் நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, கனிஷ்கா கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் பெற்றார்.
அவரை தர்ஷனி செஸ் அகாடமி பயிற்சியாளர் ராஜதர்ஷினி மற்றும் நிர்வாகிகள் அழகுசெந்தில்வேல், மணிமாறன் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கி பாராட்டினர். இதுகுறித்து மாணவி கனிஷ்கா கூறுகையில், கடந்த 6 வருடங்களாக செஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். தினமும் 10 முதல் 12 மணி நேரம் இதற்காக பயிற்சி எடுத்து வருகிறேன். மாநில அளவிலும், தேசிய அளவிலும். சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகள் படைத்திருப்பதாகவும், இந்தோனேசியாவில் நடந்த ஆசிய அளவிலான செஸ் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கமும், ருமேனியாவில் நடந்த உலக அளவிலான போட்டியில் 6- வது இடத்தையும் பெற்றிருப்பதாகவும். கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தன்னுடைய ஆசை, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை