• சற்று முன்

    கோவில்பட்டியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 37 வது புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது

     

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 37 வது தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழாவில் கோவில்பட்டி புனித ஒம் கல்லூரி தாளாளர் லட்சுமண பெருமாள் கலந்து கொண்டு  ரிப்பன் வெட்டியும் முதல் விற்பனை பிரதியை துவக்கி வைத்தார் .இப்புத்தக கண்காட்சியில் தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை, அறிவியல்,மருத்துவம்,கணிதம், ஆன்மீகம்,போட்டித் தேர்வு நூல்கள்,சிறுவர் நூல்கள்,நாவல், இலக்கியம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தலைப்புகளில் 10 ஆயிரத்திற்கும் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.புத்தக கண்காட்சி டிசம்பர் 30 முதல் ஜனவரி 12 தேதி  வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட உள்ளது. அனைத்து புத்தகங்களுக்கும் 10% சதவீதம் சிறப்பு தள்ளுபடி உண்டு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


    இந்நிகழ்ச்சியில் GVN கல்லூரி முதல்வர் சாந்தி மகேஷ்வரி, நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ்  ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் முத்து முருகன், ரவி மாணிக்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad