Header Ads

  • சற்று முன்

    வாலாஜா சாலையில் திரியும் கால்நடை விலங்குகளால் விபத்து ஏற்படுகிறது நடவடிக்கை எடுக்குமா நகராட்சி

    வாலாஜாபேட்டையில் பிரதான சாலைகளான டிரங்க்ரோடு, அம்மூர் ரோடு, அணைக்கட்டு ரோடு, மற்றும் நகரில் முக்கிய வீதிகளிலும்  பஸ் நிலைய வளாகத்திலும் சுற்றித் திரியும் மாடுகளால் தினம் தினம் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன வாலாஜா நகராட்சிக்கும், தேசிய நெடுஞ்சாலை துறைக்கும், அதிகாரிகள் வாலாஜா காவல்துறைக்கு என அனைத்து துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சமூக ஆர்வலர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பினர் பொதுமக்கள்  கொண்டு சென்றனர் ஆனாலும் இதுவரை ரோட்டில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்படவே இல்லை நடவடிக்கையும் இல்லை போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டுவருவதும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதும் மாடுகளால் தான். மேலும் இரவு, பகல் நேரங்களில் சாலைகளிலேயே மாடுகள் படுத்து ஓய்வு எடுப்பதால் வாகனங்கள் செல்ல வழி இல்லாத நிலை நிலவுகிறது சாலைகளில் வாகனங்களிலும் நடந்து செல்பவர்கள் மீதும் பல சமயங்களில் மாடுகள் முட்டி மோதுகின்றன இதனால் பள்ளிப் போகும் சிறுவர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் வயதானவர்கள் என பலதரப்பட்ட மக்கள் சாலைகளில் செல்ல அச்சப்படும் நிலையே உள்ளது மேலும் இரவில் இருள் நிறைந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் படுத்து கிடப்பதால் வேகமாக வரும் வாகனங்கள் மாடுகள் மீது மோதுவதை தவித்திட திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட வேண்டியது உள்ளது இதனால் பின்னால் வரும் வாகனங்களில் முன்னால் நின்ற வாகனத்தின் மீது மோதும் நிலையும் உருவாகின்றன விபத்து ஏற்பட வாய்ப்புகளும் உள்ளன இதனால் மக்களுக்கு காயமும் வாகனங்களுக்கு சேதமும் ஏற்படுகின்றன ஆகவே மக்களின் உயிருக்கு ஆபத்தினை விபத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த மாடுகளை சாலைகளில் உலா வருவதை தடுக்க வேண்டும் மீறி சாலைகளில் நடமாடும்  மாடுகளை அருகில் உள்ள கோசாலைகளில் சேர்த்திட அதிகாரிகள் முன் வர வேண்டும் மேலும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்திட வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பெரும் கோரிக்கையாக உள்ளது   

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad