குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கிய வேடசந்தூர் எம்எல்ஏ!

திண்டுக்கல், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்  45வது பிறந்த நாள் விழா வடமதுரை நகர திமுக சார்பில் அண்ணா திடலில் கொண்டாடப்பட்டது.

வடமதுரை திமுக பேரூர் செயலாளர் மெடிக்கல் எஸ்.கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் சுப்பையன், பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் அவர்கள் வடமதுரை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 45 பேருக்கு வேஸ்டி, சேலைகள் வழங்கினார்.  பேரூர் துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளி, கவுன்சிலர்கள் சவுந்தர்ராஜ், மகேஷ்,தேன்மொழி, சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதே போல அய்யலூர் அருகே அ.கோம்பையில் நடைபெற்ற வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்த எம்எல்ஏ காந்திராஜன், அ.கோம்பையிலிருந்து தபால்புள்ளி, காக்காயன்பட்டி, பஞ்சந்தாங்கி புதூர் வழியாக நத்தம் வரை புதிய அரசு போக்குவத்து வழித்தடங்களை திறந்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.