Header Ads

  • சற்று முன்

    திருவாடனை அருகே விபச்சார தொழிலுக்கு வரவில்லை என்றால் காரை ஏற்றிக்கொன்றுவிடுவேன் என மிரட்டிய நபர் கைது

    திருவாடனை அருகே விபச்சார தொழிலுக்கு வரவில்லை என்றால் காரை ஏற்றிக்கொன்றுவிடுவேன் என மிரட்டிய நபரை 11 மாதத்திற்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் மனைவி சாருலதா . இவரது கணவர் கண்பார்வையற்றவர் மங்களக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியரா பணியாற்றி வருகிறார்.  கடந்த 2021 ஆம் வருடம் டிசம்பர் 13ஆம் தேதி சாருலதா தனது 2 சக்கர வாகனத்தில் கணவரை மங்களக்குடி பள்ளியில் விட்டு விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்த போது., கடம்பூரைச்  சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் காரில் வேகமாக வந்து மோதுவது போல் நிறுத்தி அச்சுறுத்தி விபச்சார தொழிலுக்கு அழைத்ததாகவும் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும்மேலும் அவரைப் பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக, சாருலதா திருவாடனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் திருவாடனை காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து கடந்த 11 மாதமாக ரவி என்ற ரவிச்சந்திரனை தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவானார்.

    மேலும் இவர் இந்த சம்பவம் தொடர்பாக முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. உடன் திருவாடனை காவல்நிலையார் அவரை தேடி கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் 5 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி நேற்று ரவி என்ற ரவிச்சந்திரனை கைது செய்தனர். பின் ரவி என்ற ரவிச்சந்திரனை இரவு திருவாடானை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் ஆஜர் படுத்தினார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. இவர் மீது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு குண்டர் தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்கும் நிலுவையில் இருப்பதாகவும், மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருவாடானை  செய்தியாளர் : L.V. ஆனந்த குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad