Header Ads

  • சற்று முன்

    திருமங்கலம் பகுதிகளில் பெருகிவரும் கண்மாய் மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை.

    திருமங்கலம் பகுதிகளில் பெருகிவரும் கண்மாய் - பூக்கள் போட்டு வரவேற்ற முன்னாள் அதிமுக அமைச்சர் -  கண்மாயில் மீன் பிடித்து இளைஞர்கள் உற்சாகம் -  மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதிகளில் உள்ள மேல உரப்பனூர் ஜெ. ஆலங்குளம் , பொன்னமங்கலம், வாகைகுளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கண்மாய்கள் கடந்த பல நாட்களாக பெய்து வரும் கனமழையினால் கண்மாயில் தண்ணீர் நிரம்பி வருகின்றன.

    இக்கண்மாய்களை இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்,  முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்பி உதயகுமார் பார்வையிட்டு , கண்மாயில் நிறைந்து வரும் மழை நீரை வரவேற்கும் விதமாக பூக்கள் போட்டு வரவேற்றார். இதனை தொடர்ந்து கண்மாயில் இளைஞர்கள் ஆர்வமுடன் மீன் பிடித்து செல்வதையும் பார்த்து ரசித்தார். ஜெ. ஆலங்குளம் மற்றும் வாகைகுளம் கண்மாயில் தண்ணீர் ஆர்ப்பரித்து களுங்கிலிருந்து வெளியேறுவதில் தண்ணீரில் இளைஞர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

    இதனிடையே நிருபர்களிடம் அளித்த பேட்டியில் ஆர்.பி .உதயகுமார் கூறும் போது, கடந்த பல நாட்களாக பெய்து வரும் மழையினால்,  இத்தொகுதியில் உள்ள விவசாயிகள் நெல் மற்றும் துவரை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு மழை நீரில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad