Header Ads

  • சற்று முன்

    காட்பாடி ஒன்றிய விண்ணம்பள்ளி ஊராட்சியில் பல்வேறு முறைகேடு ஊராட்சி செயலாளர் சரவணனை காப்பாற்றிய அதிகாரிகள்

    வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், விண்ணம் பள்ளி ஊராட்சி செயலாளராக இருப்பவர் சரவணன் இவர்  15 ,வருட காலமாக ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வருதால் பல்வேறு முறைகேடு செய்து வருவதில் கில்லாடி என்கிறனர்  கிராம மக்கள். 5, வருடங்களுக்கு முன்னாள் விண்ணம்பள்ளி ஊராட்சி  சோளிங்கர் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது கிராம மக்கள் ஊராட்சி செயலாளர் சரவணன் மீது கொடுத்த புகாரின் பேரில் அரசு அதிகாரிகள் விசராணை செய்தனர்.  விசாரணை அதிகாரியை சரவணன் சரி கட்டி விட்டதால் நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொண்டாராம். அதேபோல் 02.8.22 அன்று பிற்பகல் 1,மணி அளவில் காட்பாடி ஒன்றிய அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் ( AD) ராமகிருஷ்ணன்  ஊராட்சி செயலாளர் சரவணன் மீது விசாரணை செய்துள்ளார். அவரிடம் அனைத்து ஆதாரங்களையும் கிராம மக்கள் வழங்கியுள்ளனர். ஆதராங்களை பெற்றுக்கொண்ட  அவர் விண்ணம்பள்ளி ஊராட்சி செயலாளர் சரவணன் மீது எந்த விதமான  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இது குறித்து ஊராட்சி செயலாளர் சரவணன் தன்னோடு பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களிடம் சுமோத்தாக பிரச்சனை முடிந்தது என்று ஆனந்த சிரிப்பு சிரித்துயுள்ளாராம். உயர் அதிகாரிகளும் ஊராட்சி செயலாளர் சரவணனுக்கு ஆதரவாக செயல்படுவதால் விரக்தி அடைந்த கிராம மக்களும்,அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களும்

    நாங்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காண்பதே எங்களுக்கு வழி என்று நம்புகிறோம் என்றனர். மக்களின் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு அரசு ஒதுக்கும் நிதியில் பல்வேறு வகையில் முறைகேடு செய்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்து வைத்து உள்ள ஊராட்சி செயலாளர் சரவணன் மீதும் இவர் கொடுக்கும் லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு  விசுவாசமாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்பு போலீசையும்,  நீதிமன்றத்தையும் நாங்கள் நாடுவது உறுதி என்கின்றனர் விண்ணம்பள்ளி ஊராட்சி மக்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad