திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியின் மூலம் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை பதிவு செய்ய வேண்டும்.
மற்றும் இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பேரணியை முடித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், தனி வட்டாட்சியர் தேர்தல் மோகன் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் என அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: திருப்பத்தூர் மாவட்டம் நித்தியானந்தன்
கருத்துகள் இல்லை