கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் கழிவறைக்கு மராமத்து பணி மேற்கொண்ட நற்பணி மன்ற நிர்வாகிகள்
மக்கள் நீதி மையக் கட்சி தலைவரும் நடிகருமான பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் 68வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்க நண்பர்கள் சார்பாக தமிழ்நாட்டில் சுமார் 370 அரசு பள்ளிகளில் கழிவறைகளை பராமரித்து மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் அரசு பள்ளி, விராட்டிபத்து அரசு பள்ளி, அச்சம்பத்து அரசு பள்ளி, ஆகிய மூன்று பள்ளிகளில் முதற்கட்ட பணியாக பள்ளிகளில் உள்ள கழிவறைகளை பராமரித்து சுமார் 1000 மாணவர் மாணவியர் பயன்பெறும் விதமாக தலைவர் அவர்களின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் மண்டல தலைவர் திரு அழகர் வழக்கறிஞர் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் . மேலும் மண்டல இளைஞர் அணி பரணி ராஜன் முன்னாள் நற்பணி இயக்க முன்னால் மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் சரவணன்,பாஸ்கரன் மேற்கு மாவட்ட நகர செயலாளர் செந்தில்குமார், ஆறுமுகம், வட்டச் செயலாளர்கள் கோபிநாத் கருப்பசாமி மற்றும் மைய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வை மேற்கு தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் அ.தினேஷ் பாபு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை