Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டது..

    கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் 7.13 லட்சம் வாக்காளர்கள் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டது.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து கோட்டாச்சியர்  மகாலட்சுமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இந்நிகழ்வில்  வட்டாட்சியர்கள் சுசிலா (கோவில்பட்டி), சுப்புலட்சுமி (கயத்தாறு), சசிகுமார் (விளாத்திகுளம்), நிஷாந்தினி (ஓட்டப்பிடாரம்), கிருஷ்ணகுமாரி (எட்டயபுரம்) மற்றும் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசுவா, பாஜகவை சேர்ந்த விஜயகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முனியசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

    கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,24,776  ஆண்கள், 1,30,708  பெண்கள்,  29  திருநங்கைகள் என மொத்தம் 2,55,513  வாக்காளர்கள் உள்ளனர். விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,04,416  ஆண்கள், 1,08,932 பெண்கள், 16  திருநங்கைகள் என மொத்தம் 2,13,364 வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டப்பிடாரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,19,562 ஆண்கள், 1,24,966  பெண்கள், 48 திருநங்கைகள் என மொத்தம் 2,44,576 வாக்காளர்கள் உள்ளனர். கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 7,13,453  வாக்காளர்கள் உள்ளனர். கோவில்பட்டி நகராட்சி உட்பட்ட 36 வார்டுகளில்  உள்ள 75 வாக்குச்சாவடி மையங்களை அந்தந்த வார்டு பகுதியிலேயே அமைக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை வைக்கபட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad