Header Ads

  • சற்று முன்

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொலைந்த மூன்று பவுன் நகையை மீட்டுக் கொடுத்த கோவில் பணியாளருக்கு குவியும் பாராட்டுக்கள்.

    மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த மதுரை வண்டியூர் செம்மண்சாலை பகுதியைச் சேர்ந்த சரவணன்-ஆஷா தம்பதியினர். இன்று காலை 10 மணியளவில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்த போது அப்போது எதிர்பாராத விதமாக ஆஷா கழுத்தில் அணிந்து இருந்த மூன்று பவுன் நகை காணாமல் போனது நகை காணாமல் போனது தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் சரவணன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் உதவியுடன் கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.  தொடர்ந்து நகை கோவில் உள்துறை அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. கீழே கிடந்த நகையே கோவில் பணியாளர் விஜயலட்சுமி என்பவர் பத்திரமாக எடுத்து கோவில் அலுவலகத்தில் ஒப்படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ் உத்தரவின் பெயரில் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மூன்று பவுன் தங்க நகையை ஒப்படைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அதன் உரிமையாளரிடம் காவல்துறை சார்பில் கோவில் பணியாளர் விஜயலட்சுமி கையால் ஒப்படைக்கப்பட்டது. முருகன் கோவில் வளாகத்தில் கிடந்த மூன்று பவுன் நகையை கோவில் பணியாளர் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad