Header Ads

  • சற்று முன்

    திறந்த கடைகளில் நூதன முறையில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை

    சென்னை கொடுங்கையூர் கட்டபொம்மன் சாலையில் செல் போன் கடையில் செல் போன்களின் விலையை விசாரிப்பது போல் விசாரித்து கடையின் உரிமையாளரை திசை திருப்பி விட்டு அந்த நேரத்தில் செல் போன்னை எடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

    தொடர்ந்து அருகில் உள்ள கடைகளில் ஸ்டேஷனரி கடையில் போர்டு, காப்பியர் பேப்பர் , குளிர் பானங்கள் பொருட்களை வாங்குவதை போல்  பாவலா செய்துவிட்டு கடையின் உரிமையாளரை கலர் பேப்பர் 30 வேண்டும் என கூறினான். வங்கி கடன் வட்டி கட்டுவதற்காக மாற்று நகையை வைத்து வங்கியில் 

    வாங்கி வந்த ரூபாய் 10,200 கல்லாவில் வைத்துளளார். கடையின் உரிமையாளரை திசை திருப்பி கல்லாவில் உள்ள  ரூபாய் 10,200 அபேஸ் செய்துவிட்டு நகர்ந்து விட்டான். இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் காவல் துறையினர் பகுதியிலுள்ள சி.சி. கமராவில் பதிவை பார்த்து அடையாளம் சொன்னால் நடவடிக்கை எடுக்கின்றோம் என்று கூறியுள்ளார்.  ஒரே நாளில் மூன்றுக்கு மேற்பட்ட கடைகளில்  கைவரிசை  காட்டி சென்ற நபரை காவல்துறை தேடிவருகிறது.  இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக  பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் கட்டபொம்மன் பிரதான சாலையில் சி.சி. கேமராவே இல்லை  என்பதால் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad