Header Ads

  • சற்று முன்

    சூலூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்த காவல்துறையினர்.

    கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு. பத்ரி நாராயணன், இ.கா.ப., அவர்கள் அரசால்  தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று(29.11.2022) பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க  காவல்துறையினர் சூலூர், சங்கோதிபாளையம் பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது   கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் செல்வகுமார்-(20) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 1.050 கிலோ  எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.  

    இது போன்ற சட்டவிரோதமான செயல்களில்  ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.  இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    கோவை மாவட்ட  நிருபர் - அக்னி புத்திரன்   

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad