இராஜபாளையத்தில் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை செய்த 8 வயது சிறுவன்
இராஜபாளையத்தில் பின்னோக்கி நடந்தவாறு பாக்சிங் செய்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை செய்த 8 வயது சிறுவன்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பிரபல தனியார் பஸ் கம்பெனி உரிமையாளர் முத்துராம்குமார்ராஜா ஜெய் ஹரிணி தம்பதியின் 8 வயது மகன் ரத்தினஜெய் ராஜா நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற பயிற்சியாளர் ஐயப்பன் உதவியுடன் தீவிர முயற்சி செய்து கடந்த சில மாதங்கலாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த சிறுவன்.
இன்று சாதனையில் ஈடுபட்டார் இராஜபாளையம் சின்மயா வித்தியாலயா பள்ளி சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி நடந்தவாறே பாக்ஸிங் செய்தவாறு சாதனையை மதுரை மாவட்ட காவல் துறை காண்காணிப்பாளர சிவபிரசாந்த சிறுவன் ரத்தினஜெய் ராஜா வாழ்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார்
இதையடுத்து சிறுவன் 5 கிலோமிட்டர் பின்னோக்கி நடத்தவாறு பாக்ஸ்சிங் செய்து சாதனை படைத்தார் .சிறுவனின் சாதனையை நோபல் உலக சாதனை அசிய (நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் ) புத்தகத்தில் பதிவு செய்ய நடுவர்கள் ரஞ்சித். பரணிதரன் முன்னிலையில் 8130 முறை பாக்ஸிங் செய்து 1மணி நேரம் 4.நிமிடத்தில் 5 கிலோமீட்டர் நடந்து சாதனை படைத்தார் சாதனை படைத்த சிறுவனுக்கு சான்றிதழ்களை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவா பிரசாத் வழங்கினார்
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை