Header Ads

  • சற்று முன்

    ஆறுமாதங்களாக நடைபெற்ற கழிவுநீர் கால்வாய் பணி கிடப்பில் போட்டிருக்கும் ஊராட்சி நிர்வாகம்

    பழனி அருகே அமரபூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் மூலம் சுமார் ரூ.8.70 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி (21-04-2022) அன்று தொடங்கப்பட்டு சுமார் (19-10-2022) ஆறுமாதங்களுக்கு பிறகு பணி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கழிவுநீர் கால்வாயின் அடித்தளம் பெயரளவு மட்டும் பூசப்பட்டு 100 மீட்டர் அளவுக்கு பூசப்படாமல் பாதியில் விடப்பட்டுள்ளது. கழிவுநீரானது பொதுமக்கள் பயன்படுத்தும்  ஆழ்துளை கிணறு அருகே தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மாசடையும் நிலை உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தி ஆகி அதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட  ஊராட்சி நிர்வாகம் போர் கால அடிப்படையில் சீரமைத்து தரவேண்டும் இல்லையெனில் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் இடுபடுவோம்.

    பழனி தாலுகா நிருபர் - சரவணா குமார் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad