Header Ads

  • சற்று முன்

    விருதுநகர் அருகே, விபத்து வழக்கில் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

    திருவில்லிபுத்தூர் : விருதுநகர் அருகேயுள்ள ஆமத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் உஸ்மான்அலி. கடந்த 2010ம் ஆண்டு இவர் பணியில் இருந்த போது, ஆமத்தூரில் நடந்த சாலை விபத்தில் சிக்கிய லாரியை ஆய்வு செய்வதற்காக, லாரி உரிமையாளர் சுபாஷ் என்பவரிடம் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர். வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் பணி ஓய்வுக்கு முன்பாக உஸ்மான்அலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். லஞ்ச வாங்கிய வழக்கு திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹாஜிரா ஆர் ஜிஜி, லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் உஸ்மான்அலிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad