Header Ads

  • சற்று முன்

    அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெரும் நாடார் மகா ஜன சங்க தேர்தல் 2 பெரிய அணிகள்

    தமிழகம் ,மும்பை ஆகிய பகுதிகளில் வந்த வாக்காளர்களின் நீண்ட வரிசை மதுரை நாகமலை புதுக்கோட்டை வெள்ளைசாமி கல்லூரியில் நாடார் மகாஜன சங்க தேர்தல் நடைபெறுகிறது.தற்போதைய மகாஜன சங்க தலைவரும் கரிக்கோல்ராஜ் அணியினரும், தமிழ்நாடு நாடார் பேரவை N.R. தனபாலன் என இரு அணிகளும் மற்றும் சிலர் சுயேட்சை வேட்டாளர்கள் என மொத்தம் 300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஒரு அணிக்கு 144 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்களிக்க வரும் வாக்காளர்கள் ஆதார் கார்டு மற்றும் நாடார் மகாஜன சங்க உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே கடும் சேதானைக்கு பின்னர் காவல் துறையினர் அனுமதித்தனர். கன்னியாகுமரி முதல் சென்னை மும்பை மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாக்களர்களும் வாக்களிக்க வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 7 வாக்கு சீட்டுகளில் 144 வாக்குகள் 30 வாக்கு மையங்கள் என அரசியல் கட்சிகளை மிஞ்ச வைத்த தேர்தல் களம். உயர்நீதி  மன்ற ஒப்வு பெற்ற நீதியரசர் கிருபாகரன் தலைமையில் தேர்தல் நடைபெறுகிறது. 66 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட மகாஜன சங்க உறுப்பினர்களில் 62 ஆயிரம் உறுப்பினர்களுக்கு மட்டுமே வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்களர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்களில் வந்த 800  க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்காமல் ஏமாற்றமாக திரும்பினர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad