• சற்று முன்

    இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தூக்கி பிடிக்க அப்பாவி மக்கள் பலியா ?

    கொரோனா காலகட்டத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வருமானம் இல்லாமல் மிகவும் பின்தங்கி இருந்தது.மேலும் இன்சூரன்ஸ் போட்ட நபர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்தவர்களுக்கு  இன்சூரன்ஸ் நிறுவனம் எந்த காப்பீட்டு தொகையும் வழங்கவில்லை. கொரோனா என்பது எதிர்பாராத விபத்து மாதிரிதான், அதே நேரத்தில் வெளி நாடுகளில் இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டு தொகை வழங்கியிருக்கிறது. அதுபோல் இந்தியாவில் வழங்கியிருந்தால் தொடர்ந்து மக்கள் இன்சூரன்ஸ் கட்டி இருப்பார்கள் . ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு உடனே ஓட்டுநர் உரிமம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அபராதம் வசூலிப்பதை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உரிமம் வழங்கினால் அவர்கள் அடுத்த முறை அந்த தவறு செய்யமாட்டார்கள். தலைக்கவசம் இல்லாமல் வாகனம் இயக்கினால் உடனே அபாரதத்துடன் தலைக்கவசம் வழங்கினால் மீண்டும் அந்த தவறு நிகழாது. அரசு சற்றே சிந்திக்க வேண்டும். கொரோனாவில் இருந்து இன்னமும் முழுமையாக இயல்பு வழக்கை திரும்பவில்லை. மக்களால் உருவாக்கப்பட்ட அரசு மக்களை இவ்வாறு  வட்டி வதைப்பது நியாயமா ? அரசு மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது. ஆனால் அதை வாங்கி குடித்துவிட்டு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இரட்டிப்பு அபராதமா ? இன்சூரன்ஸ் நிறுவனம்  திவால் ஆகாமல் இருக்க இருசக்கர வாகன ஓட்டிகள் மீது திணிக்கிறார்கள்.    

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மட்கட்கு 

    இறையென்று வைக்கப்படும். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad