Header Ads

  • சற்று முன்

    பழனி நேதாஜி நகரில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய நபர் கைது


    திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் 6 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டது. பழனி நேதாஜி நரைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவர் மீண்டும் 27 ஆம் தேதி வீட்டை பார்க்கும் பொழுது வீட்டில் முன் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள் சுமார் 22 1/4 பவுன்,  வைர மோதிரம் சுமார் 1 3/4  பவுன் மற்றும் ஒரு செல்போன் திருடு போயிருந்தது. 

    இந்த குற்ற சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் உத்தரவின் பேரில் பழனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு சிவசக்தி மேற்பார்வையில்  பழனி நகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில், சார்பு ஆய்வாளர் முத்துக்குமார்,  சிறப்பு சார்பு ஆய்வாளர் அருள்சாமி, தலைமை காவலர் விஜயகுமார் மற்றும் முதல் நிலை காவலர் நிர்மல்குமார் ஆகியோரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மதுரை, எஸ் எஸ் காலனியை சேர்ந்த மகாராஜன் மகன் சுரேஷ் குமார் என்பவரை நேற்று 25/11/22 ம் தேதி கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் ரூபாய் 6,00,000/- மதிப்புள்ள களவாடப்பட்ட தங்கம், வைர நகைகள் மற்றும்  செல்போன் ஒன்றும் மீட்கப்பட்டும், சம்பவத்திற்கு  பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடு திருடு போன வீட்டிற்கு அருகே உள்ள முட்புதரிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.  எதிரி சுரேஷ்குமாருக்கு  சென்னை நந்தம்பாக்கம்,  முத்தா புதுப்பேட்டை, பட்டாபிராமம்,  கோயம்புத்தூர் அன்னூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள், மதுரை திருமங்கலம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா மாவட்டத்திலும்,  சாம்ராஜ் நகர் மாவட்டத்திலும் திருட்டு வழக்குகள்  உள்ளது. குற்றவாளி சுரேஷ்குமார் தெரிவித்ததாவது தான் திருடுவதற்கு முன்பு காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டதாகவும், அந்த ஏரியாவில் சிசிடிவி கேமரா இல்லாத பகுதியை தேர்ந்தெடுத்தும், வீட்டின் முன்பு வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும் வீட்டை தேர்ந்தெடுப்பதாகவும், ஆள் இல்லாத வீட்டின் அருகே மாடிப்படி சந்துகளில் கிடைக்கும் இரும்பு ராடு போன்ற கம்பிகளை பயன்படுத்தி கதவை உடைத்து திருடுவதாக தெரிவித்துள்ளார்.

    எனவே,  பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைத்தும், போதியளவு வீட்டின் முன்பு லைட் வசதி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறும், பகல் நேரங்களில் சந்தேகப்படும் நபர்கள் யாரேனும் தெருக்களில் சுற்றி வந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்கும்படியும், வீட்டிற்கு வெளிப்புறம் எந்த ஒரு இரும்பு பைப், ராடு போன்ற கருவிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும், வெளியூருக்கு சென்றால் பால், நியூஸ் பேப்பர் போடாதவாறும்,  வீட்டில் சிசிடிவி கேமரா அமைக்குமாறும்  காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.

    பழனி தாலுகா - நிருபர் : சரவண குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad