யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் துவக்கி வைத்தார்
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் துவக்கி வைத்தார்; உடன் பங்கெடுத்து பணிகளை துவக்கி வைத்தார்
இப்பணிகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனிஸ்சேகர் இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர் எஸ். சரவணன் இ.ஆ.ப, இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரியகலா கலாநிதி, மேற்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை, யா. ஒத்தக்கடை ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, கிழக்கு தாலுகா செயலாளர் எம். கலைச்செல்வன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, மற்றும் தாலுகா குழு உறுப்பினர் ஆர்.மனோகர் உட்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை