Header Ads

  • சற்று முன்

    சிவகங்கை மாவட்டத்தில், வானவில் மன்றம் தொடக்கம்:

    சிவகங்கை: தமிழ்நாடு முதலமைச்சர்,இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “வானவில் மன்றம்” திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  “வானவில் மன்றம்” துவக்க நிகழ்வு நடைபெற்றது.

    தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “வானவில் மன்றம்” திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  “வானவில் மன்றம்” துவக்க நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில்,தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, மாணாக்கர்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். 

    அதில்,  தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணாக்கர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், அறிவியல் கண்ணோட்டத்துடன் பயில வேண்டும் என்பதற்காகவும், சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்கிடும் பொருட்டும், “வானவில் மன்றம்” என்ற திட்டத்தினை திருச்சி மாவட்டத்தில் இன்றையதினம் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை இன்றையதினமே செயல்படுத்திட  தமிழ்நாடு முதலமைச்சர் , உத்தரவிட்டதன் அடிப்படையில். சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “வானவில் மன்றம்” திட்ட தொடக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தினை அறிவியல் இயக்கத்தின் சார்பில் கருத்தாளர்களின் செயல்முறைகளுடன் மாணாக்கர்களுக்கு அறிவியல் ரீதியாக கற்பிக்கும் பொருட்டு, நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. 

    சிவகங்கை மாவட்டத்தில் 69 உயர்நிலைப்பள்ளிகள், 68 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 248 நடுநிலைப்பள்ளிகள் என, மாவட்டத்தில் மொத்தம் 385 பள்ளிகளில் “வானவில் மன்றம்” நிகழ்ச்சி ஒவ்வொரு பள்ளியிலும் சுழற்சி முறையில், மாதம் ஒருமுறை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வேதிப்பொருட்களின் பெயர்களை முதலில் மாணாக்கர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். தாங்கள் கற்கும் போது ஏன், எதற்கு என்ற கேள்விகளுடன் தங்களது சிந்தனைத்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். முந்தைய காலத்தில் தொலைத் தொடர்புகள் எவ்வாறு இருந்தன, நாம் எவ்வாறு தொடர்பு கொண்டோம்.  அதனை யார் கண்டுபிடித்தார்கள், அதன் பயன்கள் ஆகியனக் குறித்து, புரிதலுடன் கேட்டறிந்து, தேடலுடன் தினமும் பயில வேண்டும். ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களுடன் பாட ரீதியாகவும், தங்களது கேள்வித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

     கணிதம் மற்றும் அறிவியல் என்பது நமது அன்றாட வாழ்வில் தொடர்புடைய ஒன்றாகும். அதனை எளிதாக செயல்முறை விளக்கத்துடன் பயல்வதற்கு அரசால் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. அச்செயல்முறைகளின் சில விளக்கங்களை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிவியல் இயக்கத்தை சார்ந்த கருத்தாளர்கள் தங்கள் முன் செயல்விளக்கத்துடன் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.கணிதம் மற்றும் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கைகளை மாணாக்கர்கள் கருத்தில் கொண்டு, நல்ல சிந்தனையாளர்களாக விளங்கி, எதிர்காலத்தில் அறிவியல் வல்லுநர்களாகவும், கணினி மேதைகளாகவும், இளம் விஞ்ஞானிகளாகவும் திகழ வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) ப.சண்முகநாதன், உதவி திட்ட அலுவலர்  சீத்தாலெட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் பள்ளி தலைமையாசிரியை, கருத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad