• சற்று முன்

    ஒத்தையடி சாலையாக விளங்கும் ஞாயிறு கிராமம்

     ஞாயிறு கிராமதில் சுமார் 800 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் பொன்னேரி, மீஞ்சூர், அலுவலகத்திற்கோ செல்ல வேண்டுமென்றால் கண்ணியம் பாளையம் கடந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு  

    ஞாயிறு கிரமத்திலிருந்து கண்ணியம் பாளையம் செல்லும் போது சுமார் ஒரு கிலோமீட்டருக்கு மேல் சாலை  மிகவும் குறுகி காணப்படுகிறது. ஒரு பேருந்து வந்தால் எதிர்புறத்தில் ஒரு கார் கூட வரமுடியவில்லை. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனம் வரமுடியவில்லை. மேலும் இந்த சாலையில் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. பேருந்தோ, லாரியோ பழுது ஏற்பட்டுவிட்டால்  மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. பள்ளிக்கு, வேளைக்கு செல்வோர், அவசர  மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர் கடும் சிரமத்தை சந்திப்பதாக பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஞாயிறு கிராமம் முதல் கண்ணியம் பாளையம் வரை சாலை விரிவாக்கம் செய்யவேண்டுமென பொது மக்கள் சமூக ஆர்வலர்கள்  கோரிக்கையும் வைக்கின்றனர்.  

    செய்தியாளர் : பிரதீப் சந்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad