• சற்று முன்

    அஇஅதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டதனை முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து வா புகழேந்தி வாழ்த்துக்களை பெற்றார்

    அஇஅதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டதனை அடுத்து கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து வா புகழேந்தி வாழ்த்துக்களை பெற்றார் முன்னால் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நினைவு இடத்தில் நிர்வாகிகள் உடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்)

    புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க கழகத்தில் சிறப்பு  பேச்சாளராக, மாநில செயலாளராக, செய்தி தொடர்பாளராக, மாநில அம்மா பேரவை  செயலாளராக, மாண்புமிகு அம்மா அவர்கள் போட்டியிட்ட ஸ்ரீரங்கம், புதுவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி என பல மாவட்ட தேர்தல்களில் பொறுப்பாளராக மேலும் பல பொறுப்புகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செம்மையாக பணியாற்றி பல ஆண்டுகாலம் அம்மா வழக்கை நடத்துவதற்கு உதவியாக இருந்தும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிணை வழங்கியும் எண்ணிலடங்கா போராட்டங்களையும் எதிரிகளால் தொடரப்பட்ட அரசியல் வழக்குகளையும் எஞ்சி முத்தமிட்டு முன்னேறிதொடர்ந்த எனது கழகப் பணிகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இனிய தொண்டனுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வகித்த கழக கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் பணியாற்றிட ஆணை பிறப்பித்த கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு அம்மா  அவர்கள் அடையாளம் கண்ட மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எங்கள் அண்ணன் ஓபிஎஸ்  அவர்களுக்கு உறுதுணையாக உடனிருந்து கழக கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அவரது எண்ணங்களையும் அனுதினமும் பரப்புவேன்  என சபதம் ஏற்கிறேன் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad