Header Ads

  • சற்று முன்

    பட்டியல் இன வார்டுகளைபுறக்கணிப்பதாக ஊராட்சி நிர்வாகம் மீது புகார்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் திருவாளவாயநல்லூர் ஊராட்சியில் தனி வார்டுகளில் உள்ள பட்டியல் இன தெருகளில் குப்பை அதிக அளவில் தேங்கியுள்ளது. கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு நோய் தொற்று பரவும்.அபாயம் ஏற்படுகிறது. 

    இயல்பாக மழைக்காலங்களில் அதிக அளவு நோய்த்தொற்று பரவி வரும் வேளையில் பட்டியல் இன தெருக்களை மட்டும் புறக்கணிப்பதால் வாடிப்பட்டி ஒன்றிய நிர்வாகமும் மதுரை மாவட்ட நிர்வாகமும் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான  குறைவான மின்சார செயல்பாட்டால் அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாவதால் தனி ட்ரான்ஸ்பர் வசதி, ஆதி திராவிட மக்களுக்கான திருமண மண்டப வசதி உடனடியாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad