Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் அருகே இரவு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிர்கள் நீரில் மூழ்கி சேதம்! விவசாயிகள் வேதனை!

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் லேசான மலையின் காரணமாக பல்வேறு குளம் குட்டைகள் ஏரிகள் என நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்னக்குனிச்சி பகுதியைச் சார்ந்த சின்னராஜ், எத்திராஜ் ,மாணிக்கம், பெரியசாமி, உள்ளிட்ட விவசாயிகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அவங்களுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். எனவே இரவு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்  முற்றிலும் நீரில் மூழ்கி சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் பெறும் சோகத்தில் மூழ்கியுள்ளனர் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தில் பயிர் கடன் பெற்று  விவசாயம் செய்து வந்ததாகவும் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் முற்றிலும் மழைநீரில் மூழ்கியும்  சாய்ந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது  இதனால்  தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நஷ்டஈடு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் : ரூபி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad