Header Ads

  • சற்று முன்

    மதுரை வைகை ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் குதிரைகள்; மீட்ட தீயணைப்பு வீரர்கள்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது எடுத்து தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதி, மூல வைகை, கிளை நதி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் வைகை அணையில் நீர்மட்டம் 70.1 அடியை எட்டியது. இதன் காரணமாக நேற்று இரவு வைகை ஆற்றில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் வைகை ஆட்சி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிம்மக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்த படி வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது.

    வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றினுள் இறங்கவோ, குழிக்கவோ புகைப்படம் எடுக்கவோ இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர். மதுரை வைகை ஆற்றின் ஆரப்பாளையம் மேம்பாலத்தின் கீழ் மேய்ந்துகொண்டிருந்த 5குதிரைகள் திடிரென வெள்ளத்தில் சிக்கிகொண்டது. இதனையடுத்து பொதுமக்கள் மதுரை டவுன் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து மதுரை டவுன் நிலைய அலுவலர் சேகர் தலைமையில் ஆன  தீயணைப்புத்துறையினர் படகுமூலம்  சென்று

    வெள்ளத்திற்குள்தொடர்ந்து நீரின் வரத்து அதிகரித்துவருவதால் குதிரையை வெள்ள நீர் சூழ்ந்துவருவதால் இறங்கி குதிரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் சுமார் ஐந்து மணி நேரம் போராட்டத்திற்கு பின். குதிரையை பத்திரமாக மீட்டனர். 

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad