Header Ads

  • சற்று முன்

    கோவையில் திராவிட மாணவர் கழக கண்டன ஆர்ப்பாட்டம்

    கோவையில் திராவிட மாணவர் கழக கண்டன ஆர்ப்பாட்டம் வேதங்கள், இதிகாசங்கள்பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்லுவதா? நவம்பர் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் அறிவுக்குத் தூக்குப் போடும் மதவெறிப் படையெடுப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 25.11.2022 வெள்ளி - காலை 11 மணி அளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர்,  மு.இராகுலன் அவர்கள் தலைமை தாங்கினார். மண்டல மாணவர் கழக தலைவர் வெ.யாழினி வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன் அவர்கள் தொடக்க உரையாற்றினார், கோவை மாவட்ட திக  தலைவர், ம.சந்திரசேகர், முன்னிலை வகித்தார். கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தி.க.காளிமுத்து, மாநகர அமைப்பாளர் மே.ப.ரங்கசாமி மாவட்ட அமைப்பாளர் மு. தமிழ்செல்வம், மாணவர் கழக கோவை மாவட்ட செயலாளர் தக கவுதமன், தொழிலாளரணி மாவட்ட தலைவர் வெங்கிடு, மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, பழ அன்பரசு, பக ஆனந்தராஜ், போத்தனூர் வெங்கடேஷ,அர்ஜுனன், முருகானந்தம், வே.தமிழ்முரசு, முத்துமாலையப்பான், ஆட்டோ சக்தி,கவி கிருஷ்ணன், புலியகுளம் கிருஷ்ணமூர்த்தி, பெரியார் புத்தக நிலையம் பொறுப்பாளர் அ.மு.ராஜா,கனகராஜ், இலைகடைடை செல்வம், பொன்ராஜ், ராசா, ராமசாமி, உள்ளிட்ட ஏராளமானோர்  பங்கேற்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad