Header Ads

  • சற்று முன்

    சாலைகளில் தேங்கிய நீரில், கீழே வழுக்கி விழும் பொதுமக்கள்:

    மதுரை கோமதிபுரம் சாலைகளில் செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மதுரை நகரில் கடந்த சில தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் , சாலைகள் பல சேரும் சகதியும்  காணப்படுவதால், அப்பகுதி வழியே செல்லும் பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், மதுரை மேலமடை ,தாசில்தார் நகர், கோமதிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள  திருக்குறள் வீதி, வீரவாஞ்சி தெரு,  காதர் மைதீன் தெரு, அன்பு மலர் தெரு,   சௌபாக்கியா விநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு ஆகி ய

    தெருக்களில் ,மழை நீர் வடிந்து ஓட வலி இல்லாமல் , குளம் போல தேங்கியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், பாதசாரிகளும் கீழே விழுகின்ற நிலை ஏற்படுகிறது.

    இது குறித்து, மதுரை மண்டல உதவி ஆணையாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, ஜூபிலி டவுன் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து, மதுரை மாநகராட்சி ஆணையர், மற்றும் மேயர் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றி சாலைகளை செம்மைப்படுத்த சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இப் பகுதியானது, மதுரை வடக்கு தொகுதி. இது குறித்து புகார் செய்ய சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் செய்ய பொதுமக்கள் தயாராக உள்ளனராம்.

    மதுரை நகரில், தாசில்தார் நகர், கோமதிபுரம், வீரவாஞ்சி தெரு ஆகிய தெருக்களில், நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி கடிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதாம். ஆகவே, மதுரை மாநகராட்சியினர் , சாலைகளில் திரியும் நாய்களை பிடிக்க ஆர்வம் காட்ட வேண்டுமென, தாசில்தார் நகர் பொது மக்கள் கோரியுள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad