Header Ads

  • சற்று முன்

    அரசு பஸ்ஸில் குற்றால அருவி: மக்கள் வியப்பு:



    மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு பேருந்தில்,மழை நீர் அருவி போல் கொட்டுவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பழைய ஓட்டை உடைசல் பேருந்துகளை இயக்கி வருவதால், மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு டிப்போவில் உள்ள பேருந்துகள் பழுதடைந்த நிலையில், பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த நிலையில் ஷட்டர்கள் கிழிந்த நிலையில் பயணிகள் அமரும் சீட்டுகள் மேற்கூரை  ஓட்டை உடைசல் நிலையில் இருப்பதால், மழை காலங்களில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .

    குறிப்பாக, மதுரையில் இருந்து குருவித்துறை செல்லும் சோழவந்தான் அரசு பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தில் மேற்கூரை பழுதடைந்த நிலையில் இருந்ததால், நேற்று பெய்த கன மழைக்கு பேருந்து மேற்கூரைவழியாக மழை நீர் அருவி போல் கொட்டியதால்  பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் மழையில் நனைந்தபடி அங்கும் இங்கும் அலைந்தது காண்போரை மிகவும் பரிதாபத்துக்குரியதாக்கியது . தமிழக அரசும் போக்குவரத்து நிறுவனமும் புதிய பேருந்துகள் வாங்குவதில் செலுத்தும் கவனத்தை பழைய பேருந்துகளை பராமரிப்பதிலும் ஓட்டை உடைசல் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இது போன்ற வழித்தடங்களில் பயணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் .

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போல் மதுரையிலிருந்து வடகாடுப்பட்டி செல்லும் பேருந்தில், இதே போல் மேற்கூரை உடைந்து மழை நீர் கொட்டியதில்  பள்ளி மாணவர்கள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி சென்றது குறிப்பிடத்தக்கது.  சோழவந்தான் அரசு பணிமனையில் உள்ள பேருந்துகளில் பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால், உடனடியாக பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அல்லது புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் பயணிகளும் அரசுக்கும் போக்குவரத்து நிறுவனத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர். சோழவந்தானிலிருந்து- மதுரை அண்ணாநகர் நிலையத்துக்கு குறித்த நேரத்தில், அரசு நகரப் பேரூந்துகள் இயக்கப்படவில்லை என, திருவேடகத்தை சார்ந்த நாதன் தெரிவித்தார். பல பேரூந்துகள் வழியிலே பழுதாகி நின்று விடும் அவல நிலை உள்ளதாம். ஆகவே, குறித்த நேரத்தில் பஸ்ஸை இயக்க தாமதம். ஆகவே, மதுரை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையை தனி கவனம் செலுத்த கிராம மக்கள் கோரியுள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad