Header Ads

  • சற்று முன்

    மதுரையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் இதயம் மற்றும் நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது

    இதயத்துடன் 15 நிமிடத்தில் பறந்துசென்ற 108 ஆம்புலன்ஸ் - போக்குவரத்தை சீரமைத்த போக்குவரத்து காவல்துறை யினருக்கு குவியும் பாராட்டுக்கள்.

    மதுரை, ஆழ்வார்புரம் பகுதியில் அமைந்துள்ள தேனி ஆனந்தம் என்ற துணிக்கடையில் பணிபுரிந்து வந்த முத்துசங்கர்(28) என்ற இளைஞர் கடந்த 14ஆம் தேதி கடைக்கு.வரும் வழியில் சாலைவிபத்தில் காயமடைந்தார்.  இதனால் அவருக்கு மூளைச்சாவுக்கு சென்றடையும் நிலை உருவானது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் முத்துசங்கரின் இதயம் , நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை உடல் உறுப்பு தானமாக வழங்கினா்.  இதனையடுத்து இளைஞர் முத்துசங்கரின் இதயம் மற்றும் நுரையீரல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து 10.40மணிக்கு புறப்பட்டு 15நிமிடத்தில் விமான நிலையத்திற்கு இரண்டு 108ஆம்புலன்ஸ் மூலமாக அதி வேகத்தில் கொண்டுசெல்லப்பட்டது. 

    அங்கிருந்து விமானம் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேபோன்று மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கல்லீரலும் 10நிமிடத்தில் கொண்டுசெல்லப்பட்டது. இந்த மூன்று ஆம்புலன்ஸ்களையும் தகவல் தெரிவித்த பத்து நிமிடங்களுக்குள் ஆங்காங்கே சிக்னல்களில் நிற்காமல் செல்லும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆறுமுகசாமி, கூடுதல் ஆணையர் திருமலை குமார் ஆகியோர் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் துரிதமாக போக்குவரத்து சீரமைப்பு பணிகளை செய்து கொடுத்தனர். விரைவாக எடுத்து சென்று உயிர்க்காக்க உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர், மருத்துவர்கள், போக்குவரத்து காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad