Header Ads

  • சற்று முன்

    பழநி கோயில் கும்பாபிஷேக இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்: தங்க கோபுர தூய்மைப்பணி துவக்கம்

    பழநி : பழநி கோயில் கும்பாபிஷேக பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தங்க கோபுரத்தை தூய்மை செய்யும் செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 2018ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டிய நிலையில் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது பொறுப்பேற்ற திமுக அரசு கும்பாபிஷேக பணியை துரிதப்படுத்தி உள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி பழநி மலைக்கோயிலில் சேதம் அடைந்த மண்டபங்கள் மற்றும் தூண்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தற்போது கோபுரங்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேக பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று கருவறையின் மேல் உள்ள தங்க கோபுரத்தை தூய்மை செய்யும் பணி நடந்தது. ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன்பின்பு அடுத்தகட்ட பணிகள் நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழநி கோயிலில் கும்பாபிஷேக பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பழனி தாலுகா  நிருபர் சரவண குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad