Header Ads

  • சற்று முன்

    வேலூர் மாவட்டம், வேலூர் செம்பேடு ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

    வேலூர் மாவட்டம், வேலூர் செம்பேடு ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவரும் ,கிராம சபா தலைவருமான கே.அன்பழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சிகள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் நோக்கம் குறித்தும் , திட்டங்கள் , வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது ,கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளி மேலாண்மை குழு திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை  ,குறித்தும் விவாதித்தனர் .

    இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம் .கதிர் ஆனந்த் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி .நந்தகுமார் , , ஒன்றிய குழு துணைத் தலைவர்  ஜி அமுதா ஞானசேகர்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் த. பாபு , ஒன்றிய குழு உறுப்பினர் சி .சிவம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்  கௌதம் பாபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே .சூரியகாந்தி குமரன்,ஊராட்சி செயலாளர் பி பாலமுருகன் ,மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad