கோவில்பட்டி அருகே உயர் ரக பைக்கில் அதிவேகத்தில் சென்ற இளைஞர்கள்- முன்னாள் சென்ற பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சம்பவ இடத்திலேயே பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் உள்ள மஞ்சநாயக்கன் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (67). இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.இன்று மாலை தனது நண்பரான டி. சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (65) என்பவருடன் எட்டயபுரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் இருந்து மஞ்ச நாயக்கன்பட்டி விலக்கில் திரும்ப முயன்ற போது, இளம்புவனம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி கனகராஜ் இரு இளைஞர்கள் விலை உயர்ந்த பைக் வாங்கிக்கொண்டு மாலை அணிவித்து கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பொழுது முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பின்னால் அமர்ந்து இருந்த பொன்ராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த சந்துரு, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கருப்பசாமி கனகராஜ் இளைஞர்கள் உள்ளிட்ட 3 பேரும் படுகாயத்துடன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து எப்போதும் வென்றான் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை