Header Ads

  • சற்று முன்

    அதிநவீன தொழில்நுட்பத்துடன் மழை நீரை அகற்றிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்



    மதுரை மாநகரில் கடந்த நான்கு நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டு நீர் செல்ல வழி இன்றி உள்ளது இந்த நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி இருந்தது இதை பார்த்த மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் அதிநவீன இயந்திரமான துணியை வைத்து மழை நீரை அகற்றியது காட்சியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர் அதை நவீன தொழில்நுட்பம் இப்படியும் வளர்கிறதா என சிரித்தபடியே சென்றார்கள் எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்தும் இன்னும் மதுரை மாநகராட்சி ஏன் இன்னும் மாறவில்லை ஏன் என்று புரியவில்லை மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் ஒப்பந்ததாரர்கள் தூய்மை பணியாளர்களுக்கு போதிய உபகரணங்களும் கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுகிறது.

    இதுபோன்று உபகரங்கள் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரலிலிருந்து கோரிக்கையை எழுந்துள்ளது . மோட்டார் மூலம் அகற்ற வேண்டிய மழை நீரை  மதுரை மாநகராட்சியின் புதிதாக வாங்கிய அதிநவீன எந்திரத்தை பெரிய துணிகளால் அகற்றியது அப்பகுதி பொதுமக்கள் சிரித்தபடியே  வேடிக்கையாக சென்றது 

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad