• சற்று முன்

    கோவில்பட்டியில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் இளைஞர் - 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் கிழக்கு காவல்துறையினர்...

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தார் தகவல் அறிந்து.சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் கிழக்கு காவல்துறையினர் வந்து, பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையின் போது, இப்பகுதியில் புதிதாக செய்யப்பட்ட அம்பேத்கர் சிலையை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார் இதில் உடன் பாடு எட்டப்பட்டதை அடுத்து  1 மணி நேரத்திற்கு மேலாக டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தவரை  தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்டனர் பின்னர் பின்னர் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக கீழே இறக்கினர்.பின்னர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் அவரை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அம்பேத்கார் சிலை வைக்க இடம் கூறி தனியார் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad