Header Ads

  • சற்று முன்

    விளாத்திகுளம் உள்ள வில்லமரத்துப்பட்டியில் ஊராட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

    மனு அளிப்பதற்கா நடைபெறுவது  மட்டும்கிராம சபை கூட்டம் அல்ல உங்களுக்கு என்ன தேவை என்பதை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே  இக் கூட்டம் - கோவில்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை  அரசு முதன்மைச் செயலாளர் அமுதா பேச்சு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வில்லமரத்துப்பட்டியில் ஊராட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பொண்ணு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊராட்சி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    பின்னர் பார்வையற்றவர்களுக்கு இலவச செல்போன்களை வழங்கினார்.கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதன்மைச் செயலாளர் அமுதா :-அரசு நமது கிராமத்திற்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளது கொண்டு வர இருக்கிறது என்று குறித்தும் அதற்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஒவ்வொருவரும் கிராம சபை கேட்க வேண்டும்.அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதற்காக மட்டும் அல்ல கிராம சபை கூட்டம் உங்களுக்கு என்ன தேவை என்பதை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கிராம சபை கூட்டம்.மழைக்காலம் தொடங்கி விட்டது சூழலில் நம்மை தற்காத்துக் கொள்ளவும் இயற்கை பேரிடர் காலங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.நெகிழி இல்லாத கிராமமாக உங்களது கிராமத்தை மாற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் பேசினார் இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா  ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன் அடைந்து வரும் பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.பின்னர் அங்கு  உள்ள கம்மாயின் நீர் கொள்ள வினை அதிகரித்தல்  சிமெண்ட் கலவையுடன் கூடிய சாலை அமைக்கும் பணியையும் துவக்கி வைத்தார்.

    கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad