Header Ads

  • சற்று முன்

    திருநகர் 94 வது வார்டில் மாமன்ற உறுப்பினர்வார்டு குழு கூட்டம் நடைபெற்றது

    திருநகர் 94 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்யன் தலைவராகம், என்ஜினியர் செல்வ விநாயகம் செயலாளராகவும் வார்டு குழு கூட்டம் நடைபெற்றது வார்டில் உள்ள பொதுமக்களின குறை தீர்க்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம் 16  கால் மண்டபம் முன்பு வார்டு எண் 98 சார்பாக வார்டு குழு, பகுதி சபா கூட்டம் மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சி சார்பில் இன்று மதுரை திருப்பரங்குன்றம் 16ஆம் கால் மண்டபம் முன்பு வார்டு 98 சார்பாக மேற்கு மண்டலம் 5 தலைவர் சுவிதா விமல் தலைமையில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

    இதில் உதவி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள் 98 வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    விரைவில் இந்த பிரச்சனைகள் தீர்வு காணப்படும் என மண்டல தலைவர் தெரிவித்துள்ளார் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை தீர்கவும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவும் வார்டுக்கு 10 பேர் கொண்ட குழு அமைத்து மக்களின் பிரச்சினைகள் மற்றும் வரி செலுத்தாதவர்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad