• சற்று முன்

    சிவகங்கை மாவட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு


    அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை 

    ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடித்திட தமிழக அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர்      ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் ஏற்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்ட, ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,    ஊழல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர்            ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் கீழ்க்கண்ட உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி,

    நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். 

    அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.

    எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞசம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கும் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad