• சற்று முன்

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றல்



    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம்  முதலைக்குளம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற  சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை வகித்தார் .துணைத் தலைவர் பத்திரகாளி சுரேஷ் முன்னிலை வகித்தார். செயலாளர் பாண்டி வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி அறிக்கை வாசித்தார்.  ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல், பள்ளியில் குடிநீர் சுகாதார பணி மேற்கொள்ளுதல், கருப்பு கோவில் சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில்   வார்டு உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர்கள், சுகாதார அதிகாரிகள், மக்கள் நல அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad